மும்பையில் ஒரே மாதத்தில் 3வது விபத்து அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 19 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 19 பேர் பரிதாபமாக பலியாகினர். மகாராஷ்டிரா மாநிலம், குர்லா பகுதியில் உள்ள நாயக் நகர் சொசைட்டி பகுதியில் உள்ள 4 அடுக்குமாடி கட்டிடம், நேற்று முன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதை அறியாத அப்பகுதி மக்கள் பூகம்பம் ஏற்பட்டதாக பீதி அடைந்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், இடிபாடுகளில் சிக்கி பலியான 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவர்களில் 4 பேர் காயம் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து, மீட்பு பணி நடைபெறுகிறது. விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.வான மங்கேஷ் குடால்கரும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார். மும்பையில் ஒவ்வொரு பருவமழையின் போதும் கட்டிடங்கள் இடிவது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஒரே மாதத்தில் 3வது முறையாக கட்டிடம் இடிந்து உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

Related Stories: