ஆலங்குளம் பகுதியில் சர்ச், 3 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு தொடர் சம்பவங்களால் பரபரப்பு

ஆலங்குளம்: ஆலங்குளம் மங்கம்மாள் சாலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் எதிரில் கடந்த ஆண்டு கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது கோபுரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கமாக இந்த ஆலயத்தில் அதிகாலை 4.30 மணி, இரவு 7 மணி என இரண்டு வேளை ஆராதனை நடைபெறும். ஆலயத்தில் வேலை செய்யும் பாக்கியராஜ் என்பவர் நேற்றிரவு 9 மணிக்கு வழக்கம்போல ஆலயத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தை திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 உடனடியாக இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தினர். விசாரனையில், ஆலயத்தில் இருந்த கீபோர்டு, குத்துவிளக்கு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. நீதிமன்றம் எதிரில் ஆலயத்தில் திருட்டு நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன் தெற்கு மாயமான்குறிச்சி காளியம்மன் - தங்கம்மன் கோயில் அம்மன் சிலையில் இருந்த தங்கத்திலான இரண்டு தாலிசெயின்கள், உண்டியல் பணம் 30 ஆயிரம் திருடப்பட்டது. அதேநாளில் அய்யனார்குளம் இசக்கியம்மன் கோயில், கிடாரக்குளம் அடைக்கலசாஸ்தா ஆகிய கோயில்களிலும் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்ைத திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து அந்தந்த கோயில் நிர்வாகிகள் ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில்களில் நடைபெற்று வரும் திருட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: