×

நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ஒரே முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் சுற்றுசூழல் மற்றும் தட்ப வெட்ப அமைப்புகளுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை ஜூலை 1ம் தேதி முதல் தயாரிக்க, இறக்குமதி செய்ய, சேமிக்க தடை, விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்ய கூடாது.

இவை குறைவான பயன்பாடும் அதிகப்படியான மாசும் ஏற்படுத்துபவை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுசூழல் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதன்படி பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் ஜீரம் குச்சிகள், அலங்கார சேவேலைகளுக்கு பயன்படும் தெர்மால், டீ மற்றும் தண்ணீர் குவளைகள், மிட்டாய்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள் பிளாஸ்டிக் கரண்டிகளுக்கு முற்றிலுமாக தடை செய்யப்படும்.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி முதல் 75 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் 120 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்படுவதாக சுற்றுசூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து பங்கேற்பாளர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த தடை வெற்றிகரமாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


Tags : Union Government , Nationwide ban on plastic products from July 1: United States Government Announcement
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...