பெண் மீது டூவீலரை மோதி 12 சவரன் தாலி செயின் பறிப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி(60), விவசாயி. இவரது மனைவி இந்திரா(48). இவர் நேற்று காலை வழக்கம்போல் 100 நாள் வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்ற நிலையில் அவ்வழியாக டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் திடீரென இந்திரா மீது மோதியுள்ளார்.

   இதில் நிலைத்தடுமாறிய அவர் கீழே விழுந்தார். உடனே மொபட்டில் வந்த வாலிபர், இந்திரா கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலி, செயின் உள்பட 12சவரன் நகையை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா ‘திருடன், திருடன்’ என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் நகைகளை பறித்த ஆசாமி டூவீலரில் தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் படுகாயம் அடைந்த இந்திராவை, செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரங்கசாமி செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசாமியை தேடி வருகின்றனர்.

Related Stories: