11.86 கோடி மோசடி; தம்பதிக்கு சிறை

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி சத்தி சாலையை சேர்ந்தவர் பொன்.சிவசாமி. இவரது மனைவி லதா மற்றும் சுமதி, சின்னசாமி ஆகிய 4 பேர் கோபி பஸ் நிலையம் அருகே நகைக்கடை ஆரம்பித்தனர். இதற்காக தங்க நகை, கட்டிடம், நிலம் போன்றவற்றை அடமானமாக வைத்து நம்பியூரில் உள்ள வங்கியில் கடந்த 30.09.2009 அன்று 11 கோடியே 85 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றனர்.இதை திரும்ப செலுத்தாததால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விஜய்அழகிரி, வங்கியை ஏமாற்றிய பொன்.சிவசாமி, லதா, சுமதி, சின்னசாமி ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: