பள்ளத்தில் இறங்காமல் தவிர்த்த போது இரு சக்கர வாகனம் மீது ஏறி இறங்கிய லாரி: பெண் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர். உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த தனது கணவரை வீட்டிற்கு அழைத்து செல்ல தனது இருசக்கர வாகனத்தில பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் அருகே வந்த போது  ஒரு சிறிய பள்ளம் இருந்தது அந்த பள்ளத்தை கடந்து சென்ற போது பக்கவாட்டில் வந்த லாரியை கவனிக்காமல் சென்றதால் அந்த லாரியில் மீது இருசக்கர வாகனம் மோதி அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் அவர்மீது ஏறி இறங்கி அவர் நிகழ்விடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து லாரி டிரைவரை போலீசார் கைது செய்தும் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டும் விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.  

Related Stories: