ஐபிஎல் ஏலம் போன்று நிர்வாகிகளை வாங்கிய எடப்பாடி: அதிமுக பொதுக்குழு குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம்..!

சென்னை: அதிமுகவை கைப்பற்ற ஐபிஎல் ஏலம் போன்று பல கோடி ரூபாயை கொட்டி நிர்வாகிகளை வாங்கிய போதிலும் நீதிமன்ற உத்தரவால் எடப்பாடி பழனிசாமி நினைத்தது நடக்காமல் போய்விட்டதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டம் அயப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி மேற்கொண்ட யுத்திகளை கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக அயோக்கியர்களின் கூடாரம் ஆகிவிட்டதாகவும், இரட்டை இலை சின்னம் தற்போது எம்ஆர் ராதா, வீரப்பன் போன்ற வில்லன்களின் கையில் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் டிடிவி சாடினார். ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி; நல்வாய்ப்பாக வாட்டர் பாட்டிலால் மட்டும் தான் அவர் தாக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அதை விட ஆபத்தானவர்கள் என்றும் குறிப்பிட்டார். பணத்திற்காக கட்டிய மனைவியை கூட தன் மனைவி இல்லை என்று சொல்வார்கள் என காட்டமாக விமர்சித்தார்.

Related Stories: