×

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...

* எந்த அரிசியாக இருந்தாலும் குறைந்த பட்சம் 15 நிமிடங்களுக்கு குறையாமல் ஊற வைத்து உலையில் வேகவைத்தால் அது வேகும் நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும்.

* பலகாரம் செய்த பிறகு மீதமாகும் சுட்ட எண்ணெயில் வாழைக்காய், கருணைக்கிழங்கு வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.

* பாகற்காயில் உள்ள கசப்பு போக சிறிது உப்பு சேர்த்து பிசைந்து 5 நிமிடம் வைத்துவிட்டு பிறகு கழுவி விட்டு சமைத்தால் கசப்புத் தன்மை  குறைவாக இருக்கும்.

* விளக்கு போன்ற பித்தளை பாத்திரங்களை புளி சேர்த்து தேய்ப்பதற்கு பதில் எலுமிச்சைச் சாறை பாத்திரம் தேய்க்கும் பொடியுடன் சேர்த்து தேய்த்தால் எண்ணெய் பிசுக்கள் மறைந்து பளபளப்பாக மாறிவிடும்.

* வாழைக்காய் நறுக்கும் போது கறையாகும், இதனை தடுக்க சிறிது எண்ணெய் பூசிக்கொண்டால் கறை ஏற்படாது.
 
*  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலையில் அவசரமாக சமைக்க வேண்டும் என்பதால் பருப்பு மற்றும் கிழங்கு போன்றவற்றை முதல் நாள் இரவே வேகவைத்து  கொள்ளலாம்.

* ரவையை உப்புப் போட்டுப் பிசிறி வைத்து அதனுடன் உளுந்தை அரைத்து போட்டு தோசை வார்த்தால் அது ஏ-ஒன்னாக இருக்கும்.

* தேங்காய் பர்பி செய்யும்போது வேர்க்கடலையில் சிவப்புத் தோலை நீக்கி இரண்டாக உடைத்து நெய்யில் பொரித்துப் போட்டால் சுவையாக இருக்கும்.

* முட்டைக்கோசை நறுக்கும் போது அதில் உள்ள தண்டுகளை எறிந்து விடாமல் சாம்பாரில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* வெள்ளிச் சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது மிகவும் நல்லது.

* பொருட்களை கரையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடிசெய்து தூவி வைத்து பாதுகாத்துக்கொள்ளவும்.

* சிறிது சர்க்கரை கலந்த நீரில் கீரையை ஊறவைத்த பின் சமையல்செய்து சாப்பிட்டால் கீரை தனி ருசி தரும்.

* இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்துநாள் வரை புதிதாகவே இருக்கும்.

Tags :
× RELATED லிஸி வெலாஸ்கோவெஸ்