டிஎன்பிஎல் கிரிக்கெட் திருச்சியை வீழ்த்தியது திருப்பூர்

நெல்லை: நெல்லை சங்கர்நகரில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. முரளி விஜய் 34 ரன், அமித் சாத்விக் 26 ரன் எடுத்து அவுட் ஆகினர். பொறுப்புடன் ஆடிய சரவணகுமார் (17 ரன்), மதிவண்ணன் (27 ரன்) இறுதி வரை அவுட் ஆகாமல் எடுத்தனர்.

இதையடுத்து 158 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. இதனால் 6 விக்கெட்டுக்கு 98 ரன்களை எடுத்து திணறிய நிலையில், துஷார் ரஹேஜா, முஹமது ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் திருப்பூர் அணி வெற்றி பெற்றது. துஷார் ரஹேஜா 26 பந்தில் 42 ரன், முஹமது 15 பந்தில் 29 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றும், நாளையும் எந்த போட்டியும் இல்லை. 2 நாட்களும் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: