தொற்று அதிகரிப்பு

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட வில்லிவாக்கம், அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை உள்பட 15 வார்டு பகுதிகளில் கடந்த வாரத்தில் மொத்தம் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் அண்ணாநகர் 8வது மண்டல பகுதிகளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இம்மண்டலத்தில் நாளொன்றுக்கு 50 பேர் என தொற்று பரவி வருகிறது.

மாநகராட்சி சுகாதார குழுவினர், கொரோனா தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், கொரோனா தொற்று பரவலை தடுக்க அனைத்து மக்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Stories: