ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை விரிவாக்கம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் ஏற்கெனவே சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் தற்போது 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சிட்கோ தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்யும் பணி தமிழக அரசு சார்பில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த விரிவாக்கத்திற்காக அரசுக்கு சொந்தமான 67 ஏக்கர் 96 சென்ட் நிலம் சிட்கோ நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த நிலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு 115 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் 192 தொழில் மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. சிட்கோ தொழிற்பேட்டை விரிவாக்க கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு தொடங்கப்பட உள்ள தொழிற்சாலைகள் மூலம் 2 ஆயிரம் பேர் நேரடியாகவும், 4 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: