காய்கறி செடி விநியோகம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செம்பாக்கம் ஊராட்சியில், எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் யுரேகா வீட்டுத்தோட்டம் என்ற திட்டத்தின் கீழ் ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி செடிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா தலைமை தாங்கினார்.

எய்டு இந்தியா திட்ட இயக்குனர் சீனிவாசன் வரவேற்றார். இயக்குனர்கள் மலாய்குமார், ரேவதி, கௌரி, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கலந்துகொண்டு 1000 குடும்பங்களுக்கு காய்கறி செடிகள் மற்றும் பழ மரக்கன்றுகளை வழங்கி பேசினார். ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.

Related Stories: