ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர மீண்டும் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்

சென்னை: ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது. அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னதாக அதிமுக பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவில் பல திருப்பங்கள் நடைபெற்றது. அதாவது, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி கடந்த 22-ம் தேதி ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.

இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். மேலும் இந்த வழக்கினை ஐகோர்ட்டில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. இதையடுத்து  இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நள்ளிரவு விசாரணை நடத்தினர்.

விடிய விடிய நடந்த மேல்முறையீடு வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது.  அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களில் முடிவு எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை ரத்து செய்து ஜூலை 11-ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தனர். இந்த நிலையில் ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சி பதவிகளில் மாற்றம் கொண்டுவர தற்காலிக தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு கட்சி பதவிகளில் மாறுதல் செய்ய தடை கோர தேர்தல் ஆணையத்தை நாடவும் ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: