பந்தலூர் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்த கொள்ளையன் கைது

பந்தலூர் : பந்தலூர் அருகே மேலும் ஒரு கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளையன் கைவரிசை சிசிடிவி கேமராவை வைத்து போலீசார் கொள்ளையனை பிடித்தனர். பந்தலூர் அருகே கடந்த 25-ம் தேதி பந்தலூர் முருகன் கோயில் மற்றும் இரண்டு கோவில்  உண்டியலை உடைத்து கொள்ளையன் கைவரிசை காட்டினார். அதனைத் தொடர்ந்துபோலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.

இந்த  நிலையில் நேற்று இரவு பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் உள்ள முருகன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த  பணத்தை  கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக கோவில் கமிட்டியினர் தேவாலா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில்  பந்தலூர் அருகே தொண்டியாளம் பகுதியைச் சேர்ந்த  தினேஷ்குமார் (19) என்பது  தெரிய வந்தது.

அவரிடம்  விசாரணை நடத்தியதில்,பந்தலூர் முருகன் கோவில் மற்றும் மாரியம்மன், கோவில் பகவதி அம்மன் கோவில்  ஆகிய கோவில்  உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து தினேஷ்குமாரை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: