கோத்தகிரி உயிலட்டியில் 7 மாதங்களாக கரடியை பிடிக்க வைத்த கூண்டு கேட்பாரற்று கிடக்கிறது

கோத்தகிரி : கரடியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டு 7 மாதங்களாக கேட்பாரற்று கிடக்கிறது.கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி, குனியட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்தது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் கரடியை பிடிக்க உயிலட்டி பகுதியில் கூண்டு வைத்தனர். ஆனால் இதுவரை கரடி பிடிபடவில்லை. கரடி வேறு பகுதிக்குள் சென்றுஅட்டகாசம் செய்து வருகிறது.

உயிலட்டி வைக்கப்பட்ட கூண்டின் கதவு மூடப்பட்டுள்ளது. இதனால் கரடி பிடிபடவாய்ப்பு இல்லை. ஒரே இடத்தில் 7 மாதங்களாக வைக்கப்பட்ட கூண்டு தற்போது கேட்பாரற்று கிடக்கிறது. கரடி நடமாடும் இடத்தில் வைத்தால் அவை பிடிபடும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: