சைனீஷ் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் மலைக்காய்கறிகளை காட்டிலும் சைனீஷ் வகை காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசகல், தீனட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சைனீஷ் வகை  காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பகுதிகளில் உருளை, பீட்ரூட், கேரட், முட்டைகோஸ் போன்ற ஆங்கில வகை மலைக்காய்கறிகளை அதிகம் பயிரிட்டு வந்தனர்.

ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை.விவசாயிகள் சைனீஷ் வகை காய்கறிகளான புருக்கோலி, பாக்சாய், ரோமென், செல்ரி, லீக்ஸ், ஜூகினி போன்ற காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இவைகள் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நட்சத்திர விடுதிகளில் அதிகளவு  பயன்படுவதால் வியாபாரிகள் அதிகம் வாங்கிச்செல்கிறார்கள். இதனால் வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர்.

Related Stories: