பாலக்காடு அருகே காட்டுப்பன்றிகளை விரட்டி வந்த சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்தது-வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

பாலக்காடு : காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக துரத்தி வந்த சிறுத்தை கிணற்றில் விழுந்தது. சிறுத்தை விரட்டி வந்த 3 காட்டுப்பன்றிகளும் கிணற்றில் விழுந்ததில் 2 உயிரிழந்தன.

கேரள மாநிலம் பாலக்காடு புதுபரியாரம் அருகே மேப்பாடி வனப்பகுதியில் சிறுத்தை,காட்டுப்பன்றி,மான்,யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. நேற்று இவ்வனப்பகுதியை ஒட்டியுள்ள வனவாசி காலனியில் சுரேந்திரன் என்பவரது தோட்டத்தில் உள்ள 40 அடி கிணற்றில் 3 காட்டுப்பன்றிகளும் ஒரு சிறுத்தையும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளன. சிறுத்தை மற்றும் காட்டுப்பன்றிகளின் அலறல் சத்தம் கேட்ட கிராம மக்கள், அதனை மீட்க வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

மன்னார்க்காடு வனத்துறையினர் விரைந்து வந்து கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த  காட்டுப்பன்றிகள்,சிறுத்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். வலை விரித்து  கிணற்றுக்குள் கிடந்த சிறுத்தையை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு  சென்று விடுவித்தனர். இதை தொடர்ந்து 3 பன்றிகளை மீட்கும் பணியில்  ஈடுபட்டனர். இதில் 2 பன்றிகள் உயிரிழந்து விட்டன. ஒரு பன்றி மட்டும்  மீட்கப்பட்டு அதற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.காட்டுப்பன்றிகளை வேட்டையாட விரட்டி வந்த சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்ததும், அது விரட்டி வந்த பன்றிகளில் 2 நீரில் மூழ்கி உயிரிழந்த தகவல் அறிந்த கிராம மக்கள் கிணற்றை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.

Related Stories: