சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு -நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பாழ்வாய்க்கால் பகுதியில் சாலையோரம் குப்பைகள், இறைச்சி கழிவுகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள் போன்றவை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  பூதங்குடி ஊராட்சி மற்றும் அள்ளூர் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், பல்வேறு கழிவுகள் பாதுகாப்பாகவும், பொதுமக்கள், கால்நடைகள் ஆகியோருக்கு தீங்கு ஏற்படுத்தாமலும் இருக்கும் விதத்தில் அப்புறப்படுத்த வேண்டும்.

ஆனால் இப்பகுதியில் அது பின்பற்றப்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், வெளிப்பகுதியில் இருந்து  மருத்துவ கழிவுளையும் கொண்டு வந்து இங்கு சிலர் கொட்டி விட்டு செல்கின்றனர். இந்த குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகளால சுற்றுப்புற சூழல் சீர்கேடு ஏற்படுவதோடு பொதுமக்கள் உடல்நலத்தையும், நீராதாரங்களையும்கடுமையாக பாதிக்கிறது. உடனடியாக அதிகாரிகள் சாலையோரம் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். அப்பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Stories: