மானாமதுரை கண்மாய்க்கு நீர்வரும் கால்வாய்களை தூர்வார வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

மானாமதுரை :  மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட மானாமதுரை கீழமேல்குடி கிராமங்களின் வரத்துக் கால்வாய்களை மழைக்கு முன் தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மானாமதுரை பைபாஸ்ரோட்டில் உள்ளது மானாமதுரை கண்மாய். இந்த கண்மாய் மூலம் 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி நடந்து வந்தது.

வரத்துக்கால்வாய் கடந்த பத்து ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாததால் மானாமதுரை கணமாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களில் கருவேலமரங்கள் வளர்ந்து கண்மாய்க்கு நீர்செல்வது குறைந்துவிட்டது. கண்மாய் உள்வாய் பகுதிகளில் பெருகும் மழைநீரையும் கண்மாய் உள்ளே உள்ள கருவேலமரங்கள் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் விவசாய பரப்பளவு குறைந்து போய்விட்டது. எனவே வரத்துக் கால்வாய்களை மழைக்கு முன் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மானாமதுரை பகுதி விவசாயிகள் கூறுகையில், மானாமதுரை, கீழமேல்குடி கண்மாய்க்கு வைகை ஆற்றுப்பகுதியில் இருந்து வரும் நீரை வரத்து கால்வாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் தடுக்கின்றன. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. எனவே மழைக்காலம் துவங்கும்முன் வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றனர்.

Related Stories: