தூத்துக்குடி, பொத்தகாலன்விளையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தூத்துக்குடி : உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி 3வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக். பள்ளி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஜெயா சண்முகம் தலைமை வகித்து போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கினார். மேலும் போதைப்பொருட்களை பயன்படுத்தாத புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் என மாணவ- மாணவிகளை உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் காமராஜ்நகர், மூன்றாம் மைல்  ஆகிய பகுதி வழியாக ஊர்வலமாக சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் ரூபி ரத்னபாக்கியம் செய்திருந்தார்.

இதேபோல் சாத்தான்குளம்  அருகே பொத்தகாலன்விளையில் வள்ளியூர் சமூக சேவை  சங்கம் மற்றும்  பொத்தகாலன்விளை பங்கு சார்பில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தின  பேரணி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. புனித திருக்கல்யாண மாதா திருத்தலம் முன்பு விழிப்புணர்வு பேரணி  தொடங்கியது. பேரணியை திருத்தல அதிபர் வெனி இளங்குமரன் தலைமை வகித்து  தொடங்கி வைத்தார். மறை மாவட்ட இளைஞர் இயக்குநர் சேசுராஜ் முன்னிலை  வகித்தார்.  சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்  லூர்துமணி வரவேற்றார்.  பேரணி முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும்  திருத்தலம் வந்து நிறைவடைந்தது.

ஆலய  வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கவுன்சிலர்  தேவவிண்ணரசி, சாஸ்தாவிநல்லூர் பஞ். தலைவர் திருக்கல்யாணி, பங்குபேரவை  துணைத் தலைவர் சிங்கராயன் உள்ளிட்ட அருட்சகோதரிகள், பங்கு இளைஞர்கள், ஊர்  மக்கள் பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வள்ளியூர் பல்நோக்கு  சமூக சேவை சங்க இயக்குநர் ரெக்ஸ் வழிகாட்டுதலின் பேரில்  பணியாளர்கள்  ரோஸ்லின் கலாவதி, அன்சியால், மீனாட்சி தங்கராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.  

Related Stories: