அண்ணாசாலையில் பைக்கில் சென்றவரை வழிமறித்து ரூ.20 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை அண்ணாசாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் நபரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து 20 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இளையான்குடியை சேர்ந்தவர் சிவபாலன் இவர் மருத்துவ உபகரணங்கள் மொத்த விற்பனை நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். என்ஜீனியரிங்  பட்டதாரியான இவர் சொந்தமாக மருத்துவ உபகாரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்குவதற்காக நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் கடன் வாங்கி  20 லட்சம் பணத்தை ஊரிலிருந்து எடுத்துக்கொண்டு நேற்று சென்னைக்கு வந்துள்ளார்.

 சென்னை அண்ணாசாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது  அண்ணாசாலை ஸ்டேட் பேங்க் அருகே 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து  அவரை கத்தியால் கையில் வெட்டி  அவரிடமிருந்து ரூ. 20,22,000 ரொக்கத்தை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் ஓடினார்கள். தகவல் அறிந்து அண்ணாசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த சிவபாலனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். இன்னும் 24 மணிநேரத்தில் அந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்களை பிடித்துவிடுவோம் என்று அண்ணாசாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Related Stories: