முதல்முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது.: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்கு மிகப்பெரிய பெருமையாகும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாநாட்டை தொடங்கி வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

மேலும் முதல்முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது. சர்வதேச அளவில் தமிழகம் அனைவராலும் உற்றுநோக்கக்கூடிய மாநிலமாக விளங்கப்போகிறது. மேலும் தமிழ்நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சியான திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.92 கோடி ஒதுக்கியுள்ளது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவன் நான். எத்தகைய பணி சூழல் இருந்தாலும் கலைஞர், கிரிக்கெட் போட்டியை தவறாமல் பார்த்தார். மேலும் விளையாட்டுத்துறையில் ஏராளமான முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது என முதல்வர் கூறியுள்ளார்.

அதனையடுத்து பேசிய அவர், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோருக்கு ரூ.3 கோடி, வெள்ளி வெல்வோருக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடி அறிவித்துள்ளோம். விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது என்று செஸ் ஒலிம்பியாட் போட்டி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: