வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் பலி: பூங்கா அதிகாரிகள் தகவல்

சென்னை: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானது. சென்னை வண்டலூரில் உள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு,  சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு அரியவகை உயிரினங்கள், பறவையினங்கள் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சர்க்கஸ்சிலிருந்து  மணி (32) என்ற ஆண் சிங்கத்தை கடந்த 2000ம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் இருந்து மீட்டு சிறுவர் பூங்காவில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த ஆண் சிங்கம் நேற்று அதிகாலை உடல்நலக் குறைவினால் பலியானது என பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: