வீட்டை உடைத்து 12 சவரன் திருட்டு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் சேர்க்காடு பகுதி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தணிகை அரசு (47). இவர், குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் இரவு உறவினர் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்று நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலை அடுத்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், முன்கதவுகள் மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் 12 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: