அம்பானி பாதுகாப்பு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: அம்பானி குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த திரிபுரா உயர் நீதிமன்றம், ‘என்ன மாதிரியான அச்சுறுத்தல் இருக்கிறது என்ற ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த விவகாரத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என கூற திரிபுரா நீதிமன்றத்திற்கு எந்த விதமான அதிகார வரம்பும் இல்லை. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கியதற்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது’ என தெரிவித்திருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டுமென ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கை இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.

Related Stories: