×

அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுராந்தகம் காந்தி சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட துணைத்தலைவர் முனைவர்.தங்கபெரு.தமிழமுதன் தலைமை தாங்கினார். மற்றொரு மாவட்ட துணைத்தலைவர் கிரிஸ்டோபர் ஜெயபால் முன்னிலை வகித்தார். முன்னதாக, மதுராந்தகம் நகர தலைவர் ஆர்.கண்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள, அக்னி பாதை திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கூடுவாஞ்சேரி:ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள, அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கூடுவாஞ்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் விஸ்வலிங்கம், புருசோத்தமன் முன்னிலை வகித்தனர்.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர தலைவர் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில், அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னதாக, சாலை மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசாரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், மறைமலைநகர் நகர தலைவர் தனசேகரன், செங்கல்பட்டு நகர தலைவர் பாஸ்கர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பரோஸ்காந்தி, பாலவிக்னேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில்,  வட்டார தலைவர் ஜானகிராமன் நன்றி கூறினார்.
காஞ்சிபுரம்: அக்னிபாத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14ம் தேதி ஒன்றிய பாஜ அரசு அறிவித்தது. இதில், 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர்  குமரகுருநாதன் மற்றும்  மாவட்ட கவுன்சிலர் வனிதா மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் நாதன் வரவேற்று பேசினார். இதில், மாநில நிர்வாகி பத்மநாபன். மாணவரணி செயலாளர் சரவணன் மாவட்ட இளைஞரணி போகி. மாவட்ட துணைத்தலைவர்கள் அன்பு, மணிகண்டன், மோகன், குப்புசாமி, நகர பொதுச்செயலாளர் காஞ்சி காமாராஜ், வட்டார காங்கிரஸ் கந்தவேல் வஜ்ஜிரவேல், கார்த்தி, புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பாஜ அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Tags : Congress party ,Agnipad , Congressmen protest against the fire project
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...