வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் ரூ.1.37கோடியில் மாணவியர் விடுதி: எழிலரசன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி வைத்தார்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் ₹ 1.37 கோடியில் மாணவர் விடுதி கட்டும் பணியினை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டி வைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கென தனி விடுதி கட்டித்தரக்கோரி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனடிப்படையில், பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ₹ 1.37 கோடி மதிப்பில் மாணவியர் விடுதி கட்டுவதற்கான பணி திட்டமிடப்பட்டது.

அரசு ஆதிதிராவிடர் பள்ளி அருகில் உள்ள பகுதியில் சுமார் ₹ 1.37கோடியில் மாணவி விடுதி கட்டுவதற்கான பணியினை கழக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இதனை தொடர்ந்து அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹ 5 லட்சம் மதிப்பிலான மேசை, நாற்காலி ஆகியவற்றையும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வழங்கினார். இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர் பூபாலன், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: