அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாகவே அதிமுகவில் யார் ஒற்றை தலைமை என கடும் போட்டி நிலவி வருகின்றது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவாரா அல்லது ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்றுவாரா என கடும் போட்டி நிலவி வருகின்றது.

இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் அதிமுகவின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் காஞ்சிபுரம் தர்காவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவி ஏற்க கூட்டு பிராத்தனை செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று காஞ்சிபுரம் மாநகரம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், அதிமுகவின் பொதுச்செயலாளரே, கழகத்தின் ஒன்றை தலைமையே, கழகத்தின் எதிர்காலமே, தொண்டர்களின் உயிர்மூச்சே என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் அதிமுகவின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் காஞ்சிபுரம் வந்து சென்றுள்ள நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக காஞ்சிபுரம், பேருந்து நிலையம், 4 ராஜவீதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் பதவி போட்டியில் காஞ்சியில் சுயோட்சையாக போட்டியிடும் அதிமுக: காஞ்சிபுரம்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் பதவி போட்டியில், காஞ்சிபுரத்தில் அதிமுகவை சேர்ந்த ஒருவர் சுயோட்சையாக போட்டியிடுகிறார். அதனால், அங்கு பெரும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால், இந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, மீண்டும் இந்த வார்டில் தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தேதியை அறிவித்ததை தொடர்ந்து 36வது வார்டில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த இறந்த ஜானகிராமனின் தந்தை வேணுகோபால் 36வது வார்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே நடக்கும் பதவி போட்டி யார் அதிமுக சார்பில் போட்டியிட வேண்டிய வேணுகோபால் சுயேச்சையாக  வேட்புமனு தாக்கல் செய்துயள்ளார். இதைத்தொடர்ந்து அமுமுக சார்பில் சீனிவாசன், பாமக சார்பில் கன்னிவேல், பிஜேபி சார்பில் மதன்ராஜ் சார்பில் நாம் தமிழர் என் 8- பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் திறப்பு: உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் ₹ 15.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் நேற்று திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் ₹ 15.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய  டிஜிட்டல் எக்ஸ்ரே எந்திரம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல் முன்னிலை வகித்தனர்.

உத்திரமேரூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் கலைச்செல்வி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர், புதிய எக்ஸ்ரே இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்வின்போது, மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: