3 ஏழை ஜோடிகளுக்கு சீர்திருத்த திருமணம்

சென்னை: சென்னை வட கிழக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி, 17வது வார்டு குட்பட்ட வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 3 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக சீர்திருத்த திருமணம் நடைபெற்றது. இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் தலைமை வகித்தார். விழாவில் மணமக்களின் பெற்றோர்கள் மாங்கல்யத்தை எடுத்துக்கொடுக்க ஒரே மேடையில் 3 ஜோடிகளுக்கும் அடுத்தடுத்து திருமணம் நடைபெற்றது. இதில் முன்னாள் திமுக கவுன்சிலர் கவிதா மணமக்களுக்கு சீர்வரிசை கொடுத்து வாழ்த்தினார். மணமக்களின் உறவினர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: