50 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த  திம்மாவரம் பகுதியில் அமைந்துள்ள கிராமப்புற மேம்பாட்டு சங்கம் சார்பில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 50 கிராமங்களில்  இருந்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,  விதவை மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் என 50 பேருக்கு தலா 10 ஆயிரம் என மொத்தம் ₹ 5 லட்சம் மதிப்பீட்டில்  மின் மோட்டார் பொருத்திய தையல் மிஷின் வழங்கப்பட்டது. இதற்கு கிராமப்புற மேம்பாட்டு சங்க இயக்குனர் தந்தை  அருட்பணி அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில், செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விதவை மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தையல்மிஷின் மற்றும் கடன் தொகையை வழங்கினார். இந்நிகழ்வில், சங்க நிர்வாகிகள் ஜீலியாஜரின், ராஜகுமாரி, அல்போன்ஸ் உள்பட சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: