காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் திமுக சார்பில் சுப்புராயன் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட சுதா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. அப்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால், இந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வார்டில் தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தேதியை அறிவித்ததை தொடர்ந்து 36வது வார்டில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வேட்பு மனுவை தாக்கல் செயதனர். இதில், திமுக சார்பில் 36வது வார்டு வேட்பாளராக சுதா (எ) சுப்புராயன் போட்டியிடுகிறார். நேற்று, அதற்கான வேட்பு மனுவை காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோருடன் வந்து வேட்பாளர் சுதா (எ) சுப்புராயன் தேர்தல் அதிகாரி கணேஷனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். காலியாக உள்ள இடங்களுக்கு 9ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: