×

அழுகிய நிலையில் சடலம் மீட்பு

குன்றத்தூர்: குன்றத்தூர் நாவிதர் தெருவில் தூத்துக்குடியை சேர்ந்த அலெக்ஸ் (69). வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த குன்றாத்தூர் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு உடல் அழுகிய நிலையில் அலெக்ஸ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை மீட்டு, அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், கடந்த மூன்று மாதங்களாக அலெக்ஸ், இந்த வீட்டில் தங்கி, பிளாஸ்டிக்பொருட்களை விற்பனை செய்து வந்ததும், கடந்த மூன்று தினங்களாக வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Recovery of corpse in rotten condition
× RELATED அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு