திராவிட மாடல் பாசறை பயிற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில், திராவிட மாடல் பாசறை பயிற்சி கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், திராவிட மாடல் பாசறை பயிற்சி கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, கோவி.லெனின் கலந்து கொண்டு திராவிட மாடல் குறித்து விளக்கி பேசினர்.

Related Stories: