காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு தேர்வில் 88.25 சதவீத தேர்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வி துறை சார்பாக  மே 2022ல் 11ம் வகுப்பு அரசு பொது தேர்வு நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில்  6,730  மாணவர்களும்,  6,872 மாணவிகளும் என மொத்தம் 13,602 மாணவ, மாணவிகள் அரசு தேர்வில் கலந்து கொண்டனர்.  இதில்,    மொத்தம்    12,004 மாணவ, மாணவிகள் 11ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள்.   இது, சராசரியாக 88.25 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 82.07, மாணவிகள் 94.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் சதவீதம், மாணவர்களை விட 12.24 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாவட்டத்தின் தரம்  24வது இடத்தில் உள்ளது.

Related Stories: