தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. 25ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,745க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.37,960க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 26ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையே அன்றைய தினம் தங்கம் விற்பனையானது. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் மேலும் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,775க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அளவுக்கு அதிகரித்துள்ளது.

Related Stories: