பெண் சிசுக்களை தெருவில் வீசும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பெண் குழந்தைகள் வீட்டின் தெய்வங்கள் என்றும், பச்சிளம் சிசுக்கள் தெருவில் வீசப்படும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உடல் முழுவதும் நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை கடந்த 16ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அடுத்த இரு நாட்களில், தஞ்சாவூரை அடுத்த வேலிப்பட்டியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன சிசு உடல் முழுவதும் எறும்பு மொய்த்த நிலையில் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தெருக்களில் வீசப்படும் குழந்தைகள், கருவில் அழிக்கப்படும் குழந்தைகள், பிறந்தவுடனேயே மூச்சுத் திணறலை ஏற்படுத்திக் கொல்லப்படும் குழந்தைகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை பெண் சிசுக்கள்.  இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

Related Stories: