வி.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ‘திருப்புமுனை மனிதர்’ என்றும் ‘இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை’ என்றும் போற்றப்பட்ட பத்மவிபூஷன் வி.கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம்  மறைவுற்றார் என்றறிந்து மிகவும் வருந்தினேன்.

பாரத மிகுமின் நிறுவனம், இந்திய எக்கு ஆணையம், மாருதி உத்யோக் என பல நிறுவனங்களிலும் அவர் நிகழ்த்தி காட்டிய சாதனைகள் இந்திய மக்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும். வி.கிருஷ்ணமூர்த்தி மறைவு ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: