என் தலைமையைத்தான் அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்: சசிகலா பேச்சு

திருத்தணி: அதிமுக தொண்டர்கள் அனைவரும் என் தலைமையை விரும்புகின்றனர் என்று சசிகலா பேசினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களை சந்திக்க புரட்சி பிரசாரம் பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, நேற்றுமுன்தினம் மாலை திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரசார பயணத்தை துவக்கினார். முன்னதாக திருத்தணி நகர எல்லைக்கு வந்த சசிகலாவை முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன் தலைமையில், முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்ராம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலஞ்சேரி செல்வம், ஊத்துக்கோட்டை ரஜினிகாந்த், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்பாண்டியன், தாயுமானவன், சைக்கிள் ஷாப் சரவணன், ஆவடி சுதேசி, கலைச்செல்வி, திருத்தணி ஜோதிநகர் அன்பு உள்பட பலர் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் சசிகலாவை ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றனர். மூலவர் சன்னதியில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். அப்போது வழிநெடுங்கிலும் நின்றிருந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சாக்லெட் வழங்கினர்.

இதில் சசிகலா பேசும்போது, ‘’அதிமுக தொண்டர்கள் அனைவரும் என் தலைமையை விரும்புகின்றனர். தற்போது நடக்கும் செயல்கள் மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறுவோம்’ என்றார்.

Related Stories: