பெண்களுக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது

சென்னை: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் கவிதா(39),(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாலை 4 மணியளவில் எம்எம்டிஏ பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் கவிதாவை வழிமறித்து கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச்சென்றுள்ளார். இதுகுறித்து கவிதா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இதுதொடர்பாக அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த ரவி(58) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சுதா(19),(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த நபர் சுதாவை வழிமறித்து கேலி செய்து தோளில் கைப்போட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சுதா ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இதுதொடர்பாக கொருக்குப்பேட்டை தந்தை பெரியார் நகர் 3வது தெருவை சேர்ந்த பாலன்(48) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: