போலி நிறுவனம் நடத்தி பருப்பு வியாபாரியிடம் ரூ.4 கோடி மோசடி: வாலிபர் கைது

சென்னை: கிஷான் ரேசன் ஷாப் என்ற பெயரில் போலியான நிறுவனம் நடத்தி சென்னையில் பருப்பு மொத்த வியாபாரியிடம் ரூ.4 கோடி மதிப்பிலான பருப்பு மற்றும் பயிறுவகைகளை வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் வசிக்கும் என்.ஆர்.பாலாஜி (46), என்பவர் பருப்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். என்.ஆர்.பாலாஜிக்கு அவரது நண்பர் மூலம் அறிமுகமான பாண்டியராஜன் (46), ஜெய்கணேஷ், முருகேசன், ஹரிகரன் மற்றும் உமா ஆகியோர் கூட்டு சேர்ந்து கிஷான் ரேசன் ஷாப் என்ற ரேசன் கடை போன்ற கடைகளை ஆரம்பித்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து அதை சில்லரை விற்பனை செய்யப் போவதாகவும், மொத்த வியாபாரிகளிடமிருந்து பருப்பு போன்ற பொருட்களை கொள்முதல் செய்ய உள்ளதாக என்.ஆர்.பாலாஜியிடம் கூறியுள்ளனர்.

மேலும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது போன்ற போலியான ஒப்பந்த ஆணைகளையும் காண்பித்துள்ளனர். இதனை நம்பிய அவர் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ரூ.4 கோடி மதிப்புள்ள பருப்பு மற்றும் பயிறு வகைளை சப்ளை செய்துள்ளார். ஆனால் இதுவரை அவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து என்.ஆர்.பாலாஜி காவல் ஆணையரிடம் கொடுத்த புகார் அளித்தனர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் திருவல்லிக்கேணி, பழனியப்பன் கோயில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் (44) என்பவரை கடந்த ஏப்ரல் 5ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் விசாரணையில் பாண்டியராஜன் கூட்டாளிகளுடன் சேர்ந்து விருதுநகர், கோவை  போன்ற பகுதிகளிலும் இதுபோன்று சம்பவங்களில் ஈடுபட்டு வழக்குபதிவு செய்து இருப்பதும் தெரியவந்தது. மேற்படி இந்த வழக்கில் தொடர்புடைய ஜெய்கணேஷ், முருகேசன், ஹரிகரன் மற்றும் உமா ஆகிய 4 பேரையும் தனிப்படையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெய்கணஷே் என்பவர் உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா நகரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று பதுங்கியிருந்த கோவை, பொள்ளாட்சி, ஏசிஎம்ஏம்மில் ரோடு பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் (32) என்பவரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஜெய்கணேஷ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: