ரங்கசாமியை பாஜ தூக்கி எறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை: புதுவை மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜ அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து புதுச்சேரி மிஷன் வீதியில் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், அக்னிபாத் திட்டத்தால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும். இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாவது மட்டுமல்ல. அவர்களை தீவிரவாதிகளாகவும், கொள்ளைக்காரர்களாகவும் கொலைகாரர்களாகவும் மாற்றும் வேலையை மோடி அரசு செய்கிறது. எல்லா மாநிலத்திலும் ஆட்சி கவிழ்ப்பு வேலையை மோடி செய்கிறார்.  முதல்வர் ரங்கசாமி வாயை திறப்பதே இல்லை. டம்மி முதல்வராக இருக்கிறார். சூப்பர் முதல்வராக இருந்து கவர்னர் அதிகாரம் செலுத்துகிறார். முதல்வர் நாற்காலியை காப்பாற்றி கொள்வதற்காக பாஜவின் அடிமையாக ரங்கசாமி இருக்கிறார். அவர் எத்தனை நாட்கள் முதல்வராக இருப்பார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவரை பாஜ தூக்கி எறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கூறினார்.

Related Stories: