காரில் அமர்ந்திருந்த இந்திய வாலிபர் சுட்டுக் கொலை: அமெரிக்காவில் பயங்கரம்

நியூயார்க்: அமெரிக்காவில் பூங்காவில் காரில் அமர்ந்திருந்த இந்திய வம்சவாளியை சேர்ந்த நபரை மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்னம் சிங்(31). இவர் தனது தெருவில் அமைந்துள்ள பூங்காவிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். தனது நண்பரின் விலையுயர்ந்த காரில் பூங்காவிற்கு சென்ற சத்னம் அங்கு காரில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது மற்றொரு காரில் வந்த மர்மநபர்கள் திடீரென சத்னம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அவரது தலையில் குண்டுபாய்ந்து காயம்  ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சத்னமை மீட்டு அருகில் உள்ள ஜமைக்கா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. மேலும் சத்னமை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது அவர் எடுத்து வந்து இருந்த காரின் உரிமையாளர் என தவறாக நினைத்து சத்னம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

Related Stories: