×

மகளிர் டி20 தொடர்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

தம்புல்லா: இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி ஆறுதல் வெற்றிப் பெற்றது. இலங்கைச் சென்றுள்ள இந்திய மகளிர் அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்டி டி20 தொடரில் விளையாடியது. முதல் 2 ஆட்டங்களில் வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற் றியது.

இந்நிலையில் கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டம் நேற்று தம்புல்லாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய மகளிர் முதலில் களமிறங்கினர். கேப்டன் ஹர்மன்பிரீத் ஆட்டமிழக்காமல் 39*(33பந்து), ஜெமீமா 33(30பந்து) ரன் எடுக்க இந்தியா 20ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு  138ரன்னை எட்டியது.

அதனையடுத்து 139ரன் எடுத்தால் ஆறுதல் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் களம் கண்டனர். ஒருக்கட்டத்தில் 5 ஓவரில் 2விக்கெட்களை இழந்து 37ரன் எடுத்து தடுமாறியது. ஆனால்கேப்டன் சமரி, நீலாக்‌ஷி இணையின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை 17ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த அணி 3 விக்கெட் மட்டும் இழுந்து 141ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. சமரி ஆட்டமிழக்காமல் 80*(48பந்து), நீலாக்‌ஷி 30ரன் எடுத்தனர்.  இந்த ஆறுதல் வெற்றியின் மூலம்  இலங்கை, 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் தொடரை இழந்தது.  இந்த 2 அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் ஜூலை ஒண்ணாம் தேதி பல்லேகலேவில் தொடங்குகிறது.

Tags : Sri ,Lanka , Women's T20 Series: Consolation win for Sri Lanka
× RELATED இலங்கையில் இடைக்கால அரசை...