ஊராட்சி ஒன்றிய இடைத்தேர்தல்: திமுக, அதிமுக உட்பட 9 பேர் வேட்பு மனு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தலையோட்டி, திமுக, அதிமுக  உட்பட 9 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஜூலை 9ல்  இடைத்தேர்தல்  நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று திமுக சார்பில் போட்டியிடும் சேகர், பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் சி.ஜெ‌சீனிவாசன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பி.ரவீந்திரநாத் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதில், அதிமுக சார்பில் போட்டியிடும் உத்திரகுமார் அக்காட்சியின் ஒன்றிய செயலாளர் டி. டி. சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் சாந்திப்பிரியா சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திர பாபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாமக வேட்பாளராக போட்டியிடும் பார்கவி அக்கட்சியின் மாவட்ட தலைவர் பா‌.விஜயன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல், சுயேட்சை வேட்பாளராக ராஜேந்திர நாயுடு, சுவர்ண அமமுக  சார்பில் ராஜேந்திரன் உட்பட 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Related Stories: