மின்கம்பங்கள் நடும் பணி துவக்கம்: மின்தடையை தவிர்க்க

திருத்தணி: திருத்தணி நகரத்தில் 1 மற்றும் 2 மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் கீழ் மேலும் அகூர், கார்த்திகேயபுரம், பெரியகடம்பூர், சின்னகடம்பூர் ஆகிய கிராமங்களும் உள்ளன. இந்த பகுதிகளில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள், விவசாய தோட்டங்கள் ஆகியவை உள்ளன. அனைவருக்கும் அடிப்படை தேவை மின்சாரம். இந்த மின்சாரம் மேற்கண்ட இரு அலுவலகங்கள் மூலம் வினியோகம் செய்தும், பராமரித்தும் வருகின்றன.

இந்நிலையில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மின்கம்பங்கள் தற்போதும் உள்ளன. ஒவ்வொரு மின்கம்பத்திற்கு இடைப்பட்ட துாரம், 60 மீட்டராக இருந்து வந்தது. இதனால், மின்கம்பங்களின் உயரம் தாழ்வாக உள்ளதால், இதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மின்கம்பிகள் தொங்கிய நிலையில் செல்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் லேசான காற்றுக்கு கூட இரண்டு கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, மின்தடை ஏற்படுகிறது. இதனை அனைத்தும் தவிர்க்கும் பொருட்டு திருத்தணி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், இளநிலை பொறியாளர்கள் வேண்டாமிர்தம், தமிழரசன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் குறுகிய துாரம், சுமார், 30 மீட்டர் துாரத்திற்கு ஒரு மின்கம்பம் வீதம் நடப்பட்டு வருகின்றனர். மொத்தம், 200 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அடுத்த மாதம், 15ம் தேதிக்குள் அனைத்து மின்கம்பங்களும் நடப்படும்.

Related Stories: