அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று வடக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சார்பில் மத்திய பாஜக மத்திய அரசு கொண்டு வந்த இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் வழக்கறிஞர் வி.இ. ஜான் தலைமை தாங்கினார். ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் வெங்கடேஷ், மாநில செயலாளர்கள் சி.பி.மோகன்தாஸ், அஸ்வின், மாவட்ட நிர்வாகிகள் அருள்மொழி, வடிவேல்வி.எஸ்.ரகுராமன், அருள், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் இ.கே.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் ஏகாட்டூர் ஆனந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இக்கூட்டத்தில்  100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு உடனடியாக இந்தத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு காந்திசிலை அருகில் திருத்தணி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில்  நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது‌. அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கட்ராஜ் தலைமை வகித்தார். நகர தலைவர் சிவக்குமார் வரவேற்றார்‌. இதில், மாநில நெசவாளரணி தலைவர் ஜி.என். சுந்தரவேலு, மாநில செயலாளர்  கோவிந்தராஜன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் வகையில் ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வேலு, கிருஷ்ணன்,  வழக்கறிஞர் முருகன், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தியாகராஜன், நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, பாபு நாயுடு, அப்புலு, முனிகிருஷ்ணன் யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி : திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  இந்த திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் டி. ரமேஷ் தலைமை வகித்தார். முன்னதாக பூந்தமல்லி நகர தலைவர் சேதுபதி  எம்பெருமான் வரவேற்றார்.  அக்னிபாதை திட்டத்தை கொண்டு வந்த மோடியையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள்  எழுப்பினர். திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஏ. எல். லட்சுமணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: