திமுக 15வது பொது தேர்தல்; திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய தேர்தல் நடக்கும் இடங்கள்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில்  ஒன்றிய தேர்தல் நடைபெற உள்ளதாக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 15வது பொதுத் தேர்தலில், மாவட்டங்களில் உள்ள ஒன்றியக் கழகத்திற்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் மூவர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்) ஆகிய அலுவலாளர்களையும், மாவட்ட பிரதிநிதிகளாக மூவரையும் (3 பேர்), அவர்களைத் தவிர 11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களையும், தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

அதற்குரிய வேட்புமனுக்களை மாவட்டச் செயலாளர், பொறுப்பாளரிடமோ அல்லது தலைமைக் கழக பிரதிநிதியிடமோ பெற்று, முறைப்படி வேட்புமனுவினை பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்துடன் வருகிற 28ம் தேதி(இன்று) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக, மாவட்டக்கழக அலுவலகத்தில், தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்படும். பிரதிநிதியிடம் செலுத்தி, இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். வேட்பாளர்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைச் செயலாளராகவோ, பேரூர்ச் செயலாளராகவோ, ஒன்றியப் பிரதிநிதியாகவோ இருத்தல் வேண்டும். செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடுவோர் அந்தந்த ஒன்றியங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருத்தல் வேண்டும். வேட்புமனு படிவங்களை மாவட்டச் செயலாளர், பொறுப்பாளரிடத்திலோ அல்லது தலைமைக் கழக பிரதிநிதியிடமோ படிவம் ஒன்றுக்கு ₹25 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளவேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை, தலைமைக் கழகப் பிரதிநிதிகள் சரிபார்த்து, வேட்புமனுவை பரிசீலனை செய்து போட்டியிருக்கும் ஒன்றியக் கழகத் தேர்தலை ஜூன் 29 மற்றும் ஜூலை 1ம் தேதிக்குள், தலைமைக் கழகப் பிரதிநிதிகள் தேதி, இடம் அறிவித்து நடத்திட நடவடிக்கை மேற்கொள்வர். இவ்வாறு தேர்தல் நடைபெறும் நாட்களில் பிரச்னைகள் ஏதுமின்றி சுமூகமாக தேர்தல் நடைபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்- ஒன்றியங்கள்: கும்மிடிப்பூண்டி கிழக்கு, கும்மிடிப்பூண்டி மேற்கு, கும்மிடிப் பூண்டி தெற்கு, எல்லாபுரம் வடக்கு, எல்லாபுரம் தெற்கு, பூண்டி கிழக்கு, பூண்டி வடக்கு, மீஞ்சூர் வடக்கு, மீஞ்சூர் தெற்கு, மீஞ்சூர் கிழக்கு, சோழவரம் வடக்கு. திருவள்ளூர் மத்திய மாவட்டம்-ஒன்றியங்கள்: திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, பூவிருந்தவல்லி கிழக்கு, பூவிருந்தவல்லி மேற்கு, எல்லாபுரம் மத்திய, வில்லிவாக்கம். திருவள்ளூர் மேற்கு மாவட்டம்- ஓன்றியங்கள்: பூண்டி மேற்கு, கடம்பத்தூர் கிழக்கு, கடம்பத்தூர் மேற்கு, திருவாலங்காடு கிழக்கு, திருவாலங்காடு மேற்கு, பள்ளிப்பட்டு வடக்கு, பள்ளிப்பட்டு தெற்கு, திருத்தணி கிழக்கு, திருத்தணி மேற்கு, ஆர்.கே.பேட்டை கிழக்கு, ஆர்.கே.பேட்டை மேற்கு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: