தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,461 பேருக்கு கொரோனா உறுதி.! உயிரிழப்பு இல்லை; 697 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று 1,461 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,472இல் இருந்து 1,461 ஆக குறைந்தது.

சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 624 இல் இருந்து 543 ஆக குறைந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,458 லிருந்து 8,222 ஆக உயர்ந்துள்ளது. 697 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: