×

3 ஆடுகளை தாக்கி கொன்று காற்றாலை நிழலில் ஓய்வெடுத்த பெண் சிங்கம்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் கிழக்கு சடையபாளையம் அருவங்காடு தோப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மின் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றாலை நிழலின்கீழ் பெண் சிங்கம் ஒன்று ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதனை சிலர் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக வருகிறது.
மேலும், அப்பகுதியில் உள்ள 3 ஆடுகளையும் சிங்கம் தாக்கி கொன்று ரத்தத்தை குடித்து சென்றதாகவும், இறந்து கிடக்கும் ஆடுகளின் புகைப்படங்களும் பரவி வருகின்றன.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக எந்த வனப்பகுதியிலும் சிங்கம் இல்லாத நிலையில் தற்போது இப்பகுதியில் காற்றாலை நிழலில் சிங்கம் ஓய்வெடுப்பது போன்று வீடியோ எடிட் செய்து யாரேனும் வௌியிட்டுள்ளார்களா? அல்லது உண்மையிலேயே அப்பகுதியில் சிங்கம் நடமாட்டம் உள்ளதா? என்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அச்சத்தை போக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Female lion resting in the shade of a windmill attacking 3 sheep
× RELATED உத்திரமேரூர் அருகே கிளக்காடி கன்னியம்மன் ஆலய தீமிதி திருவிழா