×

கொடைக்கானலில் சூறைக்காற்று 2-வது நாளாக படகு சவாரி நிறுத்தம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானல்: சூறைக்காற்று காரணமாக கொடைக்கானலில் 2வது நாளாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள ஏரியில் 3 படகு இல்லங்கள் செயல்படுகின்றன.

நகராட்சி சார்பில் ஒரு படகு இல்லமும், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இரண்டு படகு இல்லமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரையண்ட் பூங்கா அருகே உள்ள சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் செயல்படும் படகு இல்லத்தில் இருந்துதான், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
இந்த படகு இல்லத்தில், கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று வார விடுமுறை தினம் என்பதால், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனர். சூறைக்காற்றால் பெடல் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

இதனால், படகு இல்லத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சுற்றுலா வளர்ச்சி கழக படகு இல்ல மேலாளர் அன்பரசன் கூறுகையில், ‘‘இரண்டு நாட்களாக சூறைக்காற்று வீசுவதால், படகுகளை பாதுகாப்பாக இயக்க முடியவில்லை.

இதனால், பெடல் படகு சவாரி முற்றிலும் நிறுத்தப்பட்டது. சூறைக்காற்றின் வேகம் சற்று குறைந்ததையடுத்து, துடுப்பு படகுகளை மட்டும் இயக்குகிறோம்’’ என்றார்.

Tags : Kodaikanal , Boat stop on day 2 of storm in Kodaikanal; Tourists disappointed
× RELATED கொடைக்கானலில் அட்டகாசம் செய்த குரங்குகள் ‘அரஸ்ட்’